`கொரோனாவுக்கு 5 மருந்து கசாயம்!' - சித்த மருத்துவர்கள் கூற்று
ஆடாதொடை, சிக்கரத்தை, அதிமதுரம், மிளகு, திப்பிலி ஆகியவற்றிலிருந்து கசாயம் செய்து குடித்தால் தமிழகத்தின் பக்கமே கொரோனா வைரஸின் பாதிப்பு இருக்காது என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவுகிறது என்னும் தகவல் மக்களை பீதியடைய வைத்துள்ளது. கேரளாவைத் தொடர்ந்து டெல்லியில் கொரோனா பாதிப்பு இருப்பதை அரசே ஒப்புக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். நுரையீரலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் ஆடாதொடை 5 இலைகள், சிற்றரத்தைச் சிறிதளவு, அதிமதுரம் சிறிதளவு, மிளகு 5, திப்பிலி 2 ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கசாயம் தயாரிக்க வேண்டும். இந்தக் கசாயத்தை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் பருக வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 20 மிலியும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 60 மிலியும் கொடுக்கலாம். மதிய உணவில் இஞ்சி, பூண்டுகளை அதிகம் சேர்த்து புதினா, கொத்தமல்லி துவையல் செய்து சாப்பிடலாம். மாலையில், தூதுவாளை, மஞ்சள், சீரகம், மிளகு ஆகியவற்றை கொண்டு தூதுவாளை சூப் செய்து பருகலாம். அடுத்து, வாரத்தி...